டிஜிட்டல் டெஸ்ட் - 230 எம்.எல்.ஏ - க்கள் ஃபெயில்

ஜெயலலிதா , கருணாநிதி, விஜயகாந்த் தோல்வி

‘‘அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே! உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெறவைத்தால் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். நான் உங்களில் ஒருவன். என்னை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்’’ - கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசார மைக்கில் வேட்பாளர்கள் கொட்டிய வார்த்தைகள் இவை. வேட்பாளர்கள், ‘மக்கள் பிரதிநிதி’களாக மாறி ஐந்து ஆண்டுகள் ஆகப் போகின்றன. அடுத்த தேர்தலுக்கான களம் அமைக்கப்பட்டுவிட்டது. மீண்டும் மைக் டெஸ்டிங் ஒன்... டூ... த்ரி... காதை பிளக்கப் போகிறது. இந்த ஐந்தாண்டில் எம்.எல்.ஏ-க்கள் சாதித்தார்களா, சறுக்கினார்களா? ‘மக்கள் பிரதிநிதி’களின் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருந்தது? சின்னதாக ஒரு டெஸ்ட் வைத்துப் பார்த்தால் என்ன?

‘டிஜிட்டல் இந்தியா’ என்கிறார் பிரதமர். ஸ்டாலின், அன்புமணி என நம் அரசியல்வாதிகள் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டின் 234 எம்.எல்.ஏ-க்களுக்கும் மக்கள் சேவையாற்ற வசதியாக, அரசின் சார்பில் லேப்டாப் தரப்பட்டிருக்கிறது. அவர்களைத் தொடர்புகொள்வதற்கு வசதியாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு இ-மெயில் ஐ.டி-யும் உண்டு. அரசின் இணையதளத்தில் இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். தேடிச்சென்று நேரடியாகக் கோரிக்கை மனு தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த மின்னஞ்சல் வழியேகூட தொடர்புகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்