பெரியோர்களே... தாய்மார்களே! - 37

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

‘‘நாங்கள் உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடப் போகிறோம்’’ என்று கூட்டமாக வந்து கேட்டவர்களிடம், ‘‘என்னுடைய பிறந்த தேதி எனக்கு நினைவில் இல்லை. எனக்கே நினைவில் இல்லாத நாளை நீங்கள் ஏன் கொண்டாட வேண்டும்?” என்று அந்தத் தலைவர் சொன்னார்.
‘‘சுமார் 70 ஆண்டு பொதுவாழ்க்கை கொண்டவர் நீங்கள். எத்தனையோ பிரச்னைகளைப் பார்த்துள்ளீர்கள்... தீர்த்துள்ளீர்கள். இந்தியா முழுவதும் உங்களைத் தெரியாதவர் இல்லை, அறியாதவரும் இல்லை. நீங்கள் ஏன் உங்கள் வாழ்க்கை வரலாற்றை இன்னமும் எழுதாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, ‘‘எனக்கு நாவல் எழுதிப் பழக்கமில்லை” என்று அந்தத் தலைவர் சொன்னார்.

மீண்டும் கட்டாயப் படுத்தினார்கள். ‘‘தன்னைப் பற்றியே எழுதும் ஒரு மனிதன், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும்போது கூடத் தனக்குப் புகழ் சேருவது போலப் பார்த்துக்கொள்வான்” என்று பலவீனத்தை பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டார்.
‘‘ஓர் அரசியல் தலைவராக இருந்தால் எல்லோரும் தன்னைப் பாராட்ட வேண்டும் என்று நடந்து கொள்வார்கள். ஆனால், நீங்கள் அப்படி நடந்துகொள்வது இல்லையே?” என்று அந்தத் தலைவரிடம் கேட்டார்கள். ‘‘எல்லோருமே தன்னைப் பற்றி நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகப் பல காரியங்களைச் செய்கிறார்கள். அப்படி நினைத்துக்கொள்ளும் மனிதர்களும் ஒருநாள் இறந்து போவார்கள் என்பதை ஏன் மறந்துவிடுகிறீர்கள்?” என்று திருப்பிக் கேட்டார் அந்தத் தலைவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்