“மென்மையானது எல்லாம் பலவீனமானது அல்ல!”

திருச்செங்கோட்டில் தமிழ் மண்ணே வணக்கம்

மூக நோக்கத்துடன் ஜூனியர் விகடன் சார்பில் நடத்தப்படும் ‘தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குநர் சார்பாக பேராசிரியர் சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
 
தொற்றுநோய் பரவிய காலத்திலிருந்து, தொற்றா நோய்கள் அதிகரித்து வரும் இந்தக் காலம் வரை மக்களின் வாழ்வியலோடு கலந்த உணவு முறைகள் குறித்து மருத்துவர் கு.சிவராமன் பேசினார், ‘‘நாம் அன்றாடம் குடிக்கும் தேநீர் நமது உடல் அயற்சியை போக்கவல்லது. ஆனால் அந்தத் தேநீரில், தடை செய்யப்பட்ட 13 வகை பூச்சிக்கொல்லிகள் உள்ளன. இது இப்படி என்றால் அதில் கலக்கும் பால், வேறு வகையாகத் தொந்தரவு தரவல்லது. பால் ஒரு மருந்துப் பொருள்தானே அன்றி, அது முழுமையான உணவு அல்ல. காலை உணவு பெரும் பிரச்னையாக உள்ளது. காலை உணவை தவிர்க்க வேண்டிய சூழலில் பலரும் உள்ளனர். நவநாகரிகமாக, கான்ஃப்ளக்ஸ் எனப்படும் விட்டமின் டி, கே, ஏ, நார்சத்து முதலானவை தெளிக்கப்பட்ட சோளசக்கையை சாப்பிடுகின்றனர். வேகவைத்த அது, கெட்டுவிடாமல் இருக்க, அதில் அவ்வளவு ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. வடிவத்துக்கான ரசாயனங்கள், சுவையூட்டிகள், பொலபொல என உதிர்ந்துபோவதற்கான ரசாயனங்கள் எனப் பல ரசாயனக் குப்பைகள் சேர்ந்ததை வாங்கி, நம் உடல் நலத்தைப் ‘பேணி’ காத்துக்கொண்டு இருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்