“இயற்கையை அழித்தால் அது நம்மைத் திருப்பி அழிக்கும்!”

காங்கேயத்தில் தமிழ் மண்ணே வணக்கம்

ன்றைய மாணவர்களுக்கு சமூக விழிப்பு உணர்வை ஏற்படுத்தித் தரும் நிகழ்ச்சி, ‘தமிழ் மண்ணே வணக்கம்’. ஜூனியர் விகடன் நடத்தும் இந்த நிகழ்ச்சி, காங்கேயம் நத்தக்காடையூரில் உள்ள ஈ.பி.ஈ.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

மருத்துவர் கு.சிவராமன், ‘‘தேங்காயில் இருக்கும் லாரிக் அமிலம் தாய்ப்பாலில் மட்டுமே இருக்கக் கூடியது. இந்த லாரிக் அமிலத்திலிருந்து பெறப்படும் மோனோ லாரின், இதய நோயாளிகளுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. தேங்காயில் இருக்கும் சத்துக்கள் நம் உடலில் சேரச் சேர நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுகிறது. இது தெரிந்ததால்தான் கேரளத்தவரும், பிலிப்பைன்ஸ், கொரியா, தாய்லாந்து போன்ற வெளிநாட்டினரும் தேங்காய் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தினால், ஹார்ட் அட்டாக் வராது என்கிறது ஒரு விளம்பரம். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆலிவ் ஆயிலின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. எனினும், அங்குதான் ஹார்ட் அட்டாக் நோயாளிகள் அதிகம் இருக்கிறார்கள். இது தெரியாமல் நாமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்