“பிக்னிக் மாதிரி மந்திரிகள் வந்துட்டுப் போறாங்க!”

அமைச்சர்கள் மீது பாயும் கடலூர் மக்கள்...

ண்ணீரிலும், கண்ணீரிலும் மிதக்கிறது கடலூர். மழை, வெள்ள பாதிப்புகளின் சோகம் ஒரு வாரத்துக்குப் பின்னும் தொடர்கிறது. ஆறு அமைச்சர்கள், எட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என கடலூரில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. நிவாரணம் வழங்குவதாக டி.வி-யில் அமைச்சர்கள் போஸ் கொடுக்கிறார்கள். ஆனால் பொதுமக்களோ, உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என பொங்குகிறார்கள்.

 கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் சரி செய்யப்படாமல், தங்குவதற்கு பாது காப்பான இடம் எதுவும் இல்லாமல் இரவு நேரங்களில் தூக்கமின்றித் தவிக்கிறார்கள் கிராம மக்கள். ஊரே வெள்ளத்தில் மூழ்கியிருந்தாலும் குடிக்கத் தண்ணீர் இல்லை. பல கிராமங்களில் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகி யுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்