பயங்கரம் விலகாத மவுலிவாக்கம்!

அச்சுறுத்தும் அடுத்த கட்டடம்

சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட 11 மாடி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டட விபத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த நிலையில், தற்போது இன்னொரு 11 மாடி அடுக்குமாடிக் கட்டடம் எப்போது இடிந்துவிழுமோ என்ற அச்சத்தில் அந்தப் பகுதி மக்கள் உள்ளனர்.

2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மவுலிவாக்கத்தில் பிரைம் ஸ்ருஷ்டி நிறுவனம் கட்டிய 11 மாடி பி பிளாக் அடுக்குமாடி கட்டடம் பயங்கரமான இடி தாக்குதலுக்கு உள்ளானதால் தரைமட்டமானது. விபத்தில் 61 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் முடிந்த நிலையில் விபத்துக்குக் காரணமானவர்கள் கைதுசெய்யப்பட்டனர். விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தைச் சுற்றி 150 அடி தூரம் தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டது. இப்போது போலீஸ்  வளையத்தில் அந்தப் பகுதி உள்ளது. விசாரணை, நடவடிக்கை, வழக்கு என்று நடந்துகொண்டு இருக்க... அதன் அருகில் ஏ பிளாக்கில் உள்ள இன்னொரு 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் ஒன்று எப்போது இடிந்து விழும் என்ற பீதியில் அந்தப் பகுதி மக்கள் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்