மிஸ்டர் கழுகு: பதுங்கிய சைதை!

திடீரென தண்ணீர் துளிகள் விழ... நனைந்த சிறகுகளை சிலுப்பிக்கொண்டு வந்து நின்றார் கழுகார். ‘‘சென்னை மாநகர மேயர் எங்கே?” என எடுத்த எடுப்பிலேயே கேட்டோம்.

‘‘ஊரே அதைத்தான் கேட்கிறது!” என்றபடியே பேச ஆரம்பித்தார். ‘‘வீடுகளுக்குள் புகுந்த மழைநீரையும் கழிவுநீரையும் அகற்ற முடியாமல் தவிக்கும் சென்னை மாநகர மக்களைச் சந்தித்து அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, வேலுமணி உள்ளிட்ட சிலர் ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். ஆனால், சென்னை மேயர் சைதை துரைசாமி ஓரமாகவே உட்கார வைக்கப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில் அதிகாரிகள் டீம், பகுதி வாரியாகச் சென்று வருகிறது. இந்த டீமிலும் மேயர் மிஸ்ஸிங். முதல்வர் ஜெயலலிதா வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டபோதும் மேயர் தலை தெரியவில்லை. மாவட்டச் செயலாளர் வெற்றிவேல்தான் அருகில் இருந்தார். ஆனால், ‘மேயர் அங்கு இருக்கிறார்... இங்கு இருக்கிறார்’ என அதிகாரிகள் சொல்கிறார்களே தவிர, அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரிய வில்லை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்