பெரியோர்களே... தாய்மார்களே! - 39

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ஓர் அரசாங்கத்தின் சாதனை என்பது என்ன? சப்பாத்தி போடுவதா, இட்லி போடுவதா, எங்கோ ஒரு தட்பவெப்ப நிலையில் வளர்ந்த ஆட்டை வாங்கிவந்து நம் தலையில் கட்டுவதா, வரிசையில் நின்று வாங்கிய வேகத்தில் சித்தூருக்குக் கொண்டுபோய் தெருவில் நின்று கூவி விற்கும் அளவுக்கு மோசமான கிரைண்டர், மிக்ஸி கொடுப்பதா, கட்சி மூலமாகச் செய்ய வேண்டியதை எல்லாம் ஆட்சி மூலமாகச் செய்துகொண்டு, ‘ஊரான் வீட்டு நெய்யே; என் பொண்டாட்டி கையே!’ என்று நடந்துகொள்வதா?

எது ஆட்சி? ஓர் ஆட்சி, எப்படி இருக்க வேண்டும்? இரட்டையாட்சி முறைப்படி சென்னை மாகாணத்தில் 1920-ல் நடந்த முதல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த நீதிக் கட்சி நடத்தியதே, அதுதான் ஆட்சி.  மாளிகையில் மன்னன் இருந்தாலும் மண் குடிசையில் மனசு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் கையில் ஆட்சி இருந்தால் அந்த ஆட்சி, காசு பார்ப்பதாக மட்டும் இல்லாமல் மக்கள் மாசு துடைப்பதாக அமையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்