மோடியை மீறி சுவாமி நடந்துகொள்கிறாரா?

ராகுல் காந்தியை ஜெட்லி சந்தித்த பின்னணி...

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நெருங்குகிறது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி சுறுசுறுப்பாகிவிட்டார். முதன்முறையாக ஜெட்லி, அதிகாரபூர்வமாக ராகுல் காந்தியை சந்தித்தார். அதற்கு முன்பாக, சோனியா காந்தியையும் ஜெட்லி சந்தித்தார். மகளின் திருமணத்துக்கு அழைப்பதற்காகவே அவர்களை ஜெட்லி சந்தித்தார் எனச் செய்தி வெளியானது. ஆனாலும், பல விவகாரங்கள் இந்தச் சந்திப்பில் உண்டு. இதேநேரத்தில்தான், ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகரான சுப்பிரமணியன் சுவாமி, ராகுல் காந்தி பற்றிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார். ஆகவே, இரண்டுவிதமான தகவல்கள் வருகின்றன.

பீகார்  தேர்தல் தோல்வியால், மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பலத்தை அதிகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. எனவே, காங்கிரஸின் ஆதரவு பி.ஜே.பி. அரசுக்கு நிரந்தரமாகத் தேவைப் படுகிறது. பொருளாதார வளர்ச்சி, நிதி நிர்வாகம் போன்ற பல மசோதாக்களை நிறைவேற்ற வேண்டி யிருக்கிறது. இல்லாவிட்டால் சிக்கல்கள் ஏற்படும். வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில், நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு எதிர்க் கட்சிகள் முட்டுக்கட்டை போட்டால் அது, பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தச் சூழலில்தான், மத்திய ஆட்சியின் மையமாக இருக்கும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சந்திப்புகள் நடக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்