கரன்சிகளில் காக்கின்றோம்! - அக்டோபர்-2

குன்றக்குடி சிங்கார வடிவேல், ஓவியம்: கண்ணா

இன்று...
மதுக் கடைகளுக்கு விடுமுறை!
நேற்றே வாங்கி
இருப்பு வைத்துக்கொள்ளும்...
வாங்க மறந்துவிட்டு
கூடுதல் பணம் கொடுத்து
பிளாக் மார்க்கெட்டில் வாங்கும்
மது அருந்திகளின் நினைவுகளில்...

இன்று...
சமபந்தி போஜனம்!
முக்கிய விருந்தினருக்கு
அருகில் அமரவைத்து
புகைப்படம் எடுக்க
ஒரு தீண்டத்தகாதவரைத் தேடி
அழைத்து வரும்
அதிகாரிகளின் நினைவுகளில்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்