மிஸ்டர் கழுகு: பெண் அதிகாரிகளுக்கு புரியவில்லையா?

பெய்யலாமா, வேண்டாமா என்று சீட்டு குலுக்கிக்கொண்டிருந்தது வானம். ‘‘ ‘இன்னும் எத்தனை விஷ்ணுப்ரியாக்கள்?... கொந்தளிப்பில் பெண் போலீஸார்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஜூ.வி இதழை கையில் தயாராகக் கொண்டுவந்திருந்தார் கழுகார். ‘‘அதில் என்ன ஃபாலோ அப்?’’ என்றோம்.

‘‘ஆமாம். பெண் முதல்வர் ஜெயலலிதா வசம் இருக்கும் காவல் துறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள பெண் அதிகாரிகள் பலருக்கு நடக்கும் டார்ச்சர்கள் குறித்து அதிருப்திகள் ஒலிக்கின்றன. ஆனால், இதுநாள் வரை முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் அவர்களது வருத்தத்துக்குக் காரணம். முதல்வருக்கு அருகில் ஷீலா பாலகிருஷ்ணன், ஷீலா ப்ரியா, இன்னொசென்ட் திவ்யா... ஆகிய பெண் அதிகாரிகள் இருந்தும் அவர்களும் காதுகொடுத்துக் கேட்க மறுக்கிறார்களாம். ‘எனக்கு நடக்கும் கொடுமைகளை நேரில் சொல்லட்டுமா?’ என்று போலீஸ் உயர் பெண் அதிகாரி ஒருவர் தொடர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியும் முதல்வரின் அருகில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியிடம் இருந்து பதிலே இல்லையாம். இந்த மாதிரி விஷயங்கள் முதல்வரின் கவனத்துக்குப் போகாமல் அதிகாரிகள் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்கிற தகவல் பெண் போலீஸாரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. வேறு வழியில்லாமல், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகளின் குடும்பத்தினர், நியாயம் கேட்டு எதிர்க் கட்சி தலைவர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேச ஏற்பாடு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்