“முதல் தடவையாக டீ குடிக்கிறார்... முதல் தடவையாக சைக்கிள் ஓட்டுகிறார்... முதல் தடவையாக ஆட்டோவில் தொங்குகிறார்!”

ஸ்டாலினை வறுத்தெடுக்கும் வைகோ!

‘‘தமிழக மக்களின் நலன்களுக்காக இதுவரை 5,000 கி.மீ. நடைப்பயணம் போயிருக்கிறேன். மதுவுக்கு எதிராக, சாதிக் கொடுமைகளுக்கு எதிராக, தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்பதற்காக தமிழக வீதிகளில் நடந்துள்ளேன். ஆனால், ‘ஷோ’ காட்டுவதற்காக நடப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள். இப்போதுதான், முதன் முதலாக டீக்கடையில் டீ குடிக்கிறார்கள்; முதன்முதலாக இப்போதுதான், சைக்கிள் ஓட்டுகிறார்கள்; ஆட்டோவின் ஓரத்தில் தொங்குகிறார்கள்; சில நிமிடங்களுக்குப் பிறகு, டிராக்டரில் உட்கார்ந்து தலைப்பாகை கட்ட முயல்கிறார்கள்; கட்டத் தெரியாமல் அவருக்கு ரெண்டு பேர் வந்து தலைப்பாகை கட்டிவிடுகிறார்கள்” என்று ஸ்டாலினை காய்ச்சி எடுத்தார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.

மங்கள இசை முழங்க, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் இல்லத்துக்கு வந்தார் வைகோ. அண்ணா இல்லத்தில் இருந்த புகைப்படங்களைப் பார்வை​யிட்டு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மைக் பிடித்தவர், தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் கடுமையாக விமர்சித்தார் .
“28 ஆண்டுகள் அல்லும் பகலும் உழைத்து, கட்சிக்குப் பாடுபட்ட உண்மைத் தொண்டனான என்னை கொலைப்பழி சுமத்தி, விடுதலைப்புலிகளைக் காரணம்காட்டி கட்சியிலிருந்து நீக்குவதற்கு இதே அக்டோபர் மூன்றில்தான் சதித்திட்டம் தீட்டினார்கள். அதேநாளில் இப்போது மறுமலர்ச்சிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். இரண்டு கட்சிகளும் திராவிட இயக்கம் என்ற பெயரையே கெடுத்துவிட்டன. மாறிமாறி ஆட்சிக்கு வந்து நாட்டையே கெடுத்துவிட்டனர். இப்போது மாற்று அணி உருவாகிவிட்டது. தமிழகத்தில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்” என்று சூளுரைத்தார் வைகோ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்