இலங்கையில் நடக்கும் விசாரணை நாடகம்!

ஈழ மக்களுக்கு நீதி கிடைக்குமா?

றுதிக்கட்ட போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை ராணுவத்தினரும், ஆட்சியாளர்களும் முன்நின்று இந்தப் படுகொலையை நிகழ்த்தினார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவந்தது அமெரிக்கா. இந்தத் தீர்மானத்தின்  விசாரணை அறிக்கை கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது.

விவாதத்தின்போது ஐ.நா மனித உரிமை ஆணையர் சையத் ராத் அல் ஹுசைன் பேசும்போது, ‘‘இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’’ என்று கடுமையாகச் சாடினார். இந்த நிலையில் அறிக்கை வந்த மறுநாளே, ‘போர்க்குற்றம் குறித்து காமன்வெல்த் மற்றும் பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட உள்நாட்டு விசாரணை போதும்’ என்று இலங்கைக்குச் சாதகமான ஒரு வரைவு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இந்த பல்டிக்கு அமெரிக்கா கூறும் காரணம், ‘இலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்துவிட்டது’ என்பதாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்