“நான் கலைஞன்... அவர்தான் தலைவர்!”

கருணாநிதிக்கு மகுடம் சூட்டிய கமல்!

வைரமுத்துவுக்கு கருணாநிதியும் கமலும் சேர்ந்து தமிழால் தாலாட்டிய விழா அது. தனது ஒவ்வொரு புத்தக வெளியீட்டு விழாவையும் மண்டல மாநாடுபோல நடத்தும் வைரமுத்து, இந்த விழாவை மாநில மாநாடுபோல நடத்திக் காட்டிவிட்டார். ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற நூலை கருணாநிதி வெளியிட கமல் பெற்றுக்கொண்டார். இந்த பிரமாண்ட விழா, சென்னை காமராஜர் அரங்கத்தில் கடந்த 10-ம் தேதி நடந்தது. பேராசிரியர் பர்வீன் சுல்தானா, வைரமுத்துவின் சிறுகதைகளின் சிறப்பை நகைச்சுவையும் விமர்சனமும் கலந்து முன்வைக்க, வாழ்த்துரை சொல்ல வந்தார் கமல்.

விழாவுக்கு கமலின் ரசிகர்கள் நிறையப் பேர் வந்திருந்தார்கள். அவர்கள் கமலைப் பார்த்ததும் விசில் அடித்து முழக்கங்கள் போட்டார்கள். சிலர் ‘தலைவா’ என்று குரல் எழுப்பினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்