“இனிமேல் எந்தக் கட்சிக்கும் பிரசாரம் செய்யமாட்டேன்!”

வடிவேலு சபதம்!

டந்த சட்டமன்றத் தேர்தலுக்குப்பின், பொதுவெளியில் எதைப்பற்றியும் பேசாமல் மௌனம் காத்துவந்தார், ‘வைகைப்புயல்’ வடிவேலு. நடிகர் சங்கத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், விஷால் அணி சார்பாக ஊர்ஊராகச் சென்று மைக் பிடித்து வெளுத்துக் கட்டுகிறார். நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, தன் சொந்த ஊரான மதுரைக்கு வந்திருந்த வடிவேலுவை மடக்கினோம்.

“10 வருடங்களுக்குப் பிறகு நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடக்கப் போகுது. பிரபலமான நடிகர் நடிகைகளும், நாடக நடிகர்களும் எங்கள் பக்கம் இருக்காங்க. வெற்றி வாய்ப்பு எங்களுக்குப் பிரகாசமாக இருக்கு. நானும் நாடகத்தில் இருந்து வந்தவன்தான். அதனால், பாண்டவர் அணிக்காகப் பிரசாரம் செய்றேன்’’ என்று கலகலவென பேச ஆரம்பித்தார் வடிவேலு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்