சீரழிக்கப்பட்ட சிறுமி - தப்பும் பெரிய திமிங்கிலங்கள்!

உறவினர்கள் தொடங்கி காக்கிகள் வரை...

சிவகங்கையைச் சேர்ந்த ஒரு சிறுமி சிதைக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் கொடூரம் முழுமையாக வெளியில் வரவில்லை. சொந்த அப்பா முதல் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை 27 பேர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். தொடர்புடைய ஐ.பி.எஸ் அதிகாரிகளை தப்பிக்கவைக்க இப்போதே முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆகவே, இந்த வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

கேரளாவின் சூரியநெல்லியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், 40-க்கும் மேற்பட்ட காமக்கொடூரர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கியது. நாடாளுமன்ற மாநிலங்கள் அவை துணைத் தலைவராக இருந்த
பி.ஜே.குரியன் உள்ளிட்ட மிகப்பெரிய அரசியல் தலைவர்கள்கூட அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அதைப்போலவே ஒரு கொடூரம் சிவகங்கையிலும் நடந்துள்ளது. இது பற்றி சில இதழ்களுக்கு முன்பு எழுதியிருந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்