மிஸ்டர் கழுகு: 5 நிமிடத்தில் ஆண்டு விழா!

ழுகார் தலை தெரிந்ததுமே, ‘‘2ஜி வழக்கில் என்ன நடக்கிறது? வழக்கே பணால் ஆகப்போகிறது என்ற அளவுக்கு நிலவரம் மாறிக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்களே?” என்றோம்!

‘‘வழக்கை குழப்புவதற்காகப் பரப்பப்படும் தகவல்தான் இது!” என்ற பீடிகையுடன் தொடங்கினார் கழுகார். ‘‘2ஜி வழக்கு பல வழக்குகளின் தொகுப்பு. அதற்குள் தனித்தனியாக பல கிளை வழக்குகள் உள்ளன. ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணம் வந்த விவகாரம், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 2ஜி அலைக்கற்றை உரிமத்தை ‘ஸ்வான் டெலிகாம்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கியது என பல விவகாரங்கள் அதற்குள் இருக்கின்றன. ஆனால், தற்போது டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது, பாரதிய ஜனதா அரசில் நடைபெற்ற 2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேட்டு வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு. கனிமொழி, ஆ.ராசா மற்றும் மாறன் சகோதரர்களுக்கு எதிராக நடக்கும் 2ஜி வழக்கை இது எந்த வகையிலும் பாதிக்காதாம்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்