5 கோடி கொடுத்ததாகச் சொல்வது பொய்!

மறுக்கும் ‘இமயம்’ ஜெபராஜ்

ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவின் பேட்டி, கடந்த ஜூ.வி. இதழில் வெளியானது. ‘அதில், “5 கோடி ரூபாய் வசூல் செய்து ‘இமயம்’ ஜெபராஜிடம் வைகோ கொடுத்தார். அதனை அவர் வாங்கிக்கொண்டு கட்சியை விட்டு விலகிக்கொண்டார்” என்று மல்லை சத்யா சொல்லியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டை, ‘இமயம்’ ஜெபராஜ் மறுத்துள்ளார்.

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தோற்ற நிலையில்தான், 2009-ம் ஆண்டு, ம.தி.மு.க-வில் சேர்ந்தேன். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வைகோவின் 30 பிரசார கூட்டங்களை அப்படியே ‘லைவ்’வாக ‘இமயம்’ டி.வி-யில் ஒளிபரப்பினேன். வைகோ பேட்டிகள், ம.தி.மு.க. நிகழ்ச்சிகள் பலவற்றையும் ஒளிபரப்பி இருக்கிறேன். அந்த நிகழ்ச்சியை இமயம் டி.வி-யில் பாருங்கள் என்று கொடுக்கப்பட்ட விளம்பரத் தொகைகளை எல்லாம் சேர்த்துதான் ஒரு கோடி கொடுத்ததாகச் சொல்கிறார்கள். மணிக்கணக்கில் பேசிய வைகோவின் பேச்சுகளை டி.வி-யில் ஒளிபரப்ப எவ்வளவு செலவு ஆகி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதெல்லாம் பிரதிபலன் எதிர்பாராமல் செய்ததுதான்” என்று சொன்ன ஜெபராஜிடம்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்