பார்த்து பார்த்து நாளாச்சு!

 டிகர் சங்கத் தேர்தல்  ஒரு பக்கம்  களேபரமாக நடந்தாலும், இன்னொரு பக்கம்  நெகிழ்ச்சியான காட்சிகளாக கண்கள் விரிந்தன. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் நேருக்கு நேர் சந்தித்தபோது ஆச்சர்யத்தால் கண்கலங்கி அரவணைத்துக்கொண்டனர். பாப் கட்டிங்கில் வந்த அம்பிகாவுடன், ராதாவும் வந்தார். இருவரும் நீண்டநேரம் மைதானத்திலேயே இருந்தார்கள். முன்பு சிறந்த நடிகை என்று தேசிய விருது வாங்கிய அர்ச்சனா, சுஹாசினி, ரேவதி, ஈஸ்வரி ராவ் என்று நான்கு பேரும் மர நிழலில் நின்றுகொண்டு அந்தக்கால நினைவுகளை அசைபோட்டனர். வினுசக்கரவர்த்தி, வீல் சேரில் வந்தார்.  கமலின் ‘குணா’ படத்துக்குப் பிறகு அதிகம் சினிமாவில் நடிக்காமல் அமெரிக்காவில் மகன் வீட்டில் தங்கியிருந்த ஜனகராஜ், வாக்களிக்க வந்தபோது அவரது சமகால நட்சத்திரங்கள் அவரை சூழ்ந்துகொண்டு குசலம் விசாரித்தனர். மோகன், சரிதா, சீதா, விசித்ரா, ஷகீலா, பானுப்ரியா, சரத்பாபு, சுலக்‌ஷனா, கஸ்தூரி ஆகியோர் நீண்ட காலம் கழித்து சந்தித்ததால் நடிகர் சங்கத் தேர்தல் கெட் டுகெதர் ஆகிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்