விருதை திருப்பிக்கொடுக்கும் எழுத்தாளர்களை ஏன் அவமதிக்கிறீர்கள்?

மனுஷ்ய புத்திரன்

குப்புவாத வன்முறைகளில் மோடி அரசின் மெளனத்தையும், செயலின்மையையும் கண்டித்து, 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களின் அரசு விருதுகளைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சி உருவாக்கிய அடையாளவாத பிளவு அரசியல் மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக தேசிய அளவிலான மாபெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது இது. 

மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’வின் வகுப்புவாத முகத்தை, விருதை திருப்பித் தரும் இந்தப் போராட்டம் இன்று விவாதப் பொருளாக்கியிருக்கிறது. அதனால்தான், பி.ஜே.பி. இன்று தங்களின் அரசியல் எதிரிகளைவிட, விருதுகளைத் திருப்பிக்கொடுக்கும் எழுத்தாளர்களை மூர்க்கமாகத் தாக்கிவருகிறது. ‘சுதந்திரச் சிந்தனையாளர்கள்’ என நம்பப்பட்ட பல தமிழ் எழுத்தாளர்கள், விருதுகளைத் திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்களை நோக்கி சில கேள்விகளை வீசுவதுடன், அவர்களை கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். இது புகழுக்காகவும், ஊடக வெளிச்சத்துக்காகவும் அடிக்கும் ‘ஸ்டன்ட்’ என்கிறார்கள். ‘விருதை திருப்பிக் கொடுக்கிறாயே, அரசிடமிருந்து கிடைத்த காலேஜ் சர்டிஃபிகேட்டையோ, ரேஷன் கார்டையோ திருப்பிக் கொடுப்பாயா?’ என்றெல்லாம் நமது எழுத்தாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கருத்துச் சுதந்திரத்துக்காக, கலைஞர்கள் உயிர் வாழுகிற உரிமைக்காக, எழுத்தாளர்கள் மேற்கொண்ட போராட்ட வடிவம் சக எழுத்தாளர்களாலேயே இவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தப்பட்ட அவலம், உலகத்தில் வேறு எங்கும் இருக்குமா என்று தெரியவில்லை. அமிதாவ் கோஷ் போன்ற சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் விருதை திருப்பிக் கொடுக்காதபோதும்கூட, போராடும் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், ‘தமிழ் நண்டுகள்’ வழக்கமான தங்கள் புத்தியை காட்டிக்கொண்டிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்