ஜெயில் பஜாருக்கு ‘ஜே’!

சிறைக்குள் மறுமலர்ச்சி

ஜெயிலுக்குப் போய் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வருபவர்களை ‘கிரிமினல்’களாகவே பார்க்கிறது சமூகம். சுற்றுச்சூழல் மட்டுமல்ல, குடும்பத்தாரின் புறக்கணிப்புக்கும் ஆளாகிறார்கள். அவர்களுக்கு யாரும் வேலையும் கொடுப்பதில்லை. சுயமாக ஒரு தொழில் செய்து பிழைக்கலாம் என நினைத்தாலும், சிறையிலேயே பல ஆண்டுகளைக் கழித்த காரணத்தால், எந்தத் தொழிலிலும் முறையான பயிற்சியோ, அனுபவமோ இருப்பதில்லை. இந்தச் சூழ்நிலையை மாற்ற பெரும் முயற்சிகளை எடுத்திருக்கிறது தமிழக சிறைத் துறை நிர்வாகம். அது வியக்கத்தக்க அளவுக்கு ஆச்சர்யங்களை உண்டாக்கி, பலனை அறுவடை செய்திருக்கிறது.

மத்திய சிறைகளில் கம்பிகளை எண்ணுவதிலேயே பொழுதைக் கழித்துவந்த ஆயுள்தண்டனைக் கைதிகள், இப்போது கேட்டரிங் மாஸ்டர்களாக, இயற்கை விவசாயிகளாக, கார்பென்டர்களாக, சுயதொழில் செய்பவர்களாக உருமாறி இருக்கிறார்கள். ஜெயிலுக்குள் நடக்கும் மாற்றங்கள் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். மதுரை, திருச்சி, சேலம், கடலூர் சிறைகளின் நேரடி விசிட் முடிந்த நிலையில் வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புழல், மத்திய சிறைகளுக்கு இந்த வாரம் விசிட் அடித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்