கவர்களில் ஓட்டை... கசியும் பால்!

ஆவின் மீது அக்கறையற்ற அரசு

டாஸ்மாக் மது விற்பனையில் அதீத அக்கறையோடும் ஆர்வத்தோடும் செயல்படும் தமிழக அரசு, ஆவின் நிறுவனத்தை மாற்றான் தாய் மனப்போக்குடன் நடத்துகிறது. அதன் விளைவாக, மக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான பால் தரமானதாகக் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

கிராமங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகளில் கொண்டு வரும்போது, நடுவழியில் அந்த லாரிகளை நிறுத்தி பாலில் கலப்படம் செய்துவந்த விவகாரம், ஆவின் நிறுவனத்துக்குக் கரும்புள்ளியாக அமைந்தது. உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டிய சி.பி.சி.ஐ.டி போலீஸார், இதில் மெத்தனப் போக்குடன் இருந்ததால், அந்த வழக்கு நீர்த்துப்போய்விட்டது. கலப்படம் செய்ததாக கைதுசெய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியான வைத்தியநாதன், ஜாமீனில் வெளிவந்து வழக்கம்போல ‘பிசினஸ்களை’ கவனித்துக்கொண்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்