“எந்தவித பலன்களையும் அரசு வழங்க மறுக்கிறது!”

வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வேதனை

மிழக அரசின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் படைப் பிரிவில் பணியாற்றுபவர்கள், வெடிகுண்டாக வெடிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இளைஞர் படையில் பணியாற்றியவர்களைத் தற்போது தமிழ்நாடு காவல் படையில் நிரந்தரப் பணியாளர்களாகச் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், தலைவர்களின் பாதுகாப்புக்காக உயிரை துச்சமென மதித்து பணியாற்றும் எங்களுக்கு எந்தவித சலுகையும் இல்லை என்று அவர்கள் கொந்தளிக்கின்றனர். என்னதான் பிரச்னை என்று விசாரித்தோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு தமிழக போலீஸ் துறையின் கீழ் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் படை என்ற பிரிவு 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ராணுவத்தில் குறிப்பிட்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 2014-ம் ஆண்டு வரை இந்தப் பிரிவில் 140 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2008-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட 70 பேர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை. தொடர்ந்து பல முறை அரசிடம் முறையிட்டும் முதல்வர் பிரிவுக்கு மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்