நிழல் படம் நிஜப் படம்! - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
யுகன்

ரு அமெரிக்க அதிபர், தான் செய்த தவற்றை மக்கள் பார்வையிலிருந்து மறைக்க; பொய்யான காரணம் ஒன்றைச் சொல்லி ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கிறார். மக்களும், அதிபரின் தவற்றை மறந்து போரைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். மக்களின் நாட்டுப்பற்று கொதிநிலையில் இருக்கும்போதே, தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடுகிறார். இதுதான் ‘வாக் தி டாக்’ திரைப்படம்.

பொதுத் தேர்தலுக்கு இருவாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் செக்ஸ் புகார் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார். தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் அந்தச் செய்திகளை வெளியிட்டு பரபரப்பாக்குகின்றன. எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் இருந்த அதிபருக்கு இது பின்னடைவை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னையிலிருந்து அதிபரைக் காப்பாற்ற கன்ராட் பிரீன் என்னும் ஊடக நிபுணர் வரவழைக்கப்படுகிறார். அவர், நீண்ட யோசனைக்குப் பின் ஏதாவது ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதுதான், விஷயத்தைத் திசை திருப்ப ஒரே வழி என்கிறார். அந்த நாடு அல்பேனியா என்றும் தீர்மானிக்கிறார். அவர் உடனடியாகக் கிளம்பி ஹாலிவுட் தயாரிப்பாளர் மாட்ஸைப் போய்ப் பார்க்கிறார். அவரிடம், ‘போர் நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்கிறார். முதலில் மறுக்கும் மாட்ஸ், பிறகு சரி என்கிறார். உடனே மாட்ஸ், இசையமைப்பாளர் ஒருவரை வரவழைத்து தீம் சாங்க் ஒன்றை உருவாக்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்