20 நாட்களில் 10 கொலைகள்...

திருநெல்வேலியை மிஞ்சியது கிருஷ்ணகிரி!

ல்வாவுக்கு மட்டுமல்ல... கொலைக்கும் பெயர்போன திருநெல்வேலியையே மிஞ்சியிருக்கிறது கிருஷ்ணகிரி. இங்கு 20 நாட்களில் மட்டும் 10 கொலைகள் அரங்கேறியிருக்கின்றன. ஆகஸ்ட் 1-ம் தேதியில் ஆரம்பித்து 20-ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விழுந்த மொத்த கொலைகளின் எண்ணிக்கை 10.

ராயக்கோட்டை அருகே உள்ள உல்லப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த முனிரத்னாவை அவருடைய இரண்டு மகன்களே குத்திக் கொலை செய்தார்கள். முனிரத்னாவுக்கு வேறு ஒருவருடன் இருந்த கள்ளத்தொடர்புதான் அதற்குக் காரணம். மற்றொரு கள்ளக்காதல் விவகாரத்தில் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த பழனியம்மாளை அவரது கணவரே கொலை செய்தார். சிவகங்கை இளையான்குடியைச் சேர்ந்த வனிதா, தனது 4 வயது மகன் நதீஷ்குமாரை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் வீசிவிட்டுச் சென்றார். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொழுவட்டா என்னும் கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். வேப்பனப்பள்ளியைச் சேர்ந்த முனுசாமி என்கிற ப்ளஸ்-2 மாணவனை தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தார்கள். கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண், தன்னுடைய கணவர் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்தார். சூளகிரியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் முரளிதரநாதன் போட்டியின் காரணமாக கடத்திக் கொலை செய்யப்பட்டார். சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த மாயாண்டி என்பவரை சொத்துத் தகராறில் அவரது மருமகனே போட்டுத்தள்ளினார். ஓசூரில் கோஷ்டி மோதல் காரணமாக விஸ்வ ஹிந்து பரிஷத் பிரமுகரான மகேஷ் 11 பேர் கொண்ட கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டார். பர்கூரில் சாலம்மாள் என்கிற 80 வயது மூதாட்டியை அவர் அணிந்திருந்த நகைகளைப் பறிப்பதற்காக அவரது பேரனே கொலை செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்