ஒரு சாதியினருக்கு ஆதரவாக செயல்படுகிறாரா எஸ்.பி.?

தகிக்கும் தஞ்சை!

ஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்.பி-யாக இருக்கும் தர்மராஜன் மீது அரசியல் மற்றும் சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு புகார்களை அடுக்குகிறார்கள்.

கடந்த ஜூலை மாதம் பஞ்சாபகேசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பஞ்சாபகேசனின் தம்பி சுந்தரமூர்த்தி ஐ.ஜி ராமசுப்பிரமணியனிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் மாவட்ட எஸ்.பி தர்மராஜன் மீது குற்றச்சாட்டு சொல்லி இருக்கிறார். சுந்தரமூர்த்தியிடம் பேசினோம். “என்னுடைய அண்ணன் பஞ்சாபகேசன், திருக்காட்டுப்பள்ளி காவல்நிலையம் எதிரே படுகொலை செய்யப்பட்டார். போலீஸார் ஒரு மணி நேரம் கழித்துதான் அந்த இடத்துக்கு வந்தார்கள். எஸ்.பி தர்மராஜன் எனது அண்ணன் கொலை சம்பவத்துக்கு முந்தைய நாள் விடுமுறையில் சென்றார். கொலை சம்பவத்துக்கு மறுநாள் பணிக்கு வந்தார். கொலையாளிகளைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையில் ஒரே பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளை எஸ்.பி நியமித்தார். கொலையாளிகள் எஸ்.பி-யின் சொந்த ஊரான முதுகுளத்தூரில் உள்ள கோர்ட்டில் சரணடைந்தனர். இது எங்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்புகிறது. ‘சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை’ என்று அழுத்தமாகச் சொன்னோம். அதனால்தான் எஸ்.பி மீதும் வழக்குப் பதிவு செய்யவேண்டுமென ஐ.ஜி-யிடம் புகார் அளித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்