கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை!

ரண்வீர் சேனா நடத்திய பீகார் பயங்கரம்

‘‘இது இந்திய நாட்டுக்கே தலைக்குனிவு” - பீகாரில் கூலி உயர்வு கேட்ட ஒரே காரணத்துக்காக 144 தலித் மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேட்டு ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனின் கோபமான வார்த்தைகள் இவை. இதைவிட பெரும் தலைக்குனிவு, தலித் மக்களைக் கொடூரமாகக் கொன்றதால் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலையான நிகழ்வு. அப்படி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள், வன்முறையை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று வாக்குமூலம் அளித்து நாட்டையே பதைபதைக்க வைத்துள்ளார்கள்.

பீகார் மாநிலத்தில்  உயர் சாதி நிலப்பிரபுக்களின் நிலங்களில் வேலைபார்த்த தலித் மக்கள், கொத்தடிமைகளைவிட மோசமாக நடத்தப்பட்டனர். 1995-களில் உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்டு சிறுசிறு குழுக்களாகப் போராடிய தலித் மக்களை, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்றுதிரட்டி மாநிலம் தழுவிய பெரும் போராட்டம் செய்ய வைத்தனர். போராட்டத்தை ஒடுக்க நினைத்த தரிச்சந்திர சிங் என்ற நிலப்பிரபு, அவரது உறவினரான முன்னாள் ராணுவ வீரர் ரண்வீர் செளத்ரியின் உதவியுடன் ‘ரண்வீர் சேனா’ என்ற படையை உருவாக்கினார். இந்தப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஏ.கே-47, எல்.எம்.ஜி போன்ற ராணுவம் பயன்படுத்தி ஒதுக்கிய ஆயுதங்களை கையாளப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்