மிஸ்டர் கழுகு: “தி.மு.க-வுடன் சேர வேண்டாம்!” விஜயகாந்த்தை தடுத்த சுவாமி

‘‘விஜயகாந்த்தை சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் இருந்து வந்து சந்தித்த மர்மத்தைச் சொல்லும்!” என்று கழுகார் தலை தெரிந்ததுமே கேள்வியைப் போட்டோம்.

‘‘கடந்த 5-ம் தேதி, பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்திருந்தார். அவர் நேராக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். அவரை விஜயகாந்த் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். இந்த சந்திப்பின்போது முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா, தே.மு.தி.க இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் உடனிருந்தனர். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சந்திரலேகாவைப் பார்த்து, ‘உங்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பான போட்டோ - செய்தியை சமீபத்தில் வாட்ஸ் அப்பில் பார்த்தேன். எப்படி இருக்கிறீர்கள்?’ என்று விசாரித்தாராம் விஜயகாந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்