கொலையில் முடிந்த ‘சிட்டுக்குருவி’ மோதல்!

தூத்துக்குடியில் துள்ளத் துடிக்க....

தூத்துக்குடியில் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தீவிரமாகப் போராடிவந்த மீனவர் சங்கத்தின் தலைவர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டிக்கொன்றதால், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டுக்கிடக்கிறது. அங்கு, பதற்றம் தணியும்வரை துறைமுகத்தைத் திறக்க மாட்டோம் என்கிறார்கள் போலீஸார்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. நிரந்தரப் பணியாளர்கள் 5 ஆயிரம் பேரும், தற்காலிகப் பணியாளர்  5 ஆயிரம் பேரும் என மொத்தம் 10 ஆயிரம் தொழிலாளர்கள் இந்தத் துறைமுகத்தை நம்பி வாழ்கிறார்கள். படகு உரிமையாளர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் ஆகியோருக்காகச் சில தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று, மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கம். அதன் தலைவராக இருந்தவர், பார்த்திபன். இவரைத்தான் கடந்த 2-ம் தேதி ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்