சிறந்த மாநகராட்சி, அது போன மாசம்... ஜப்தி ஆகிப்போச்சு, இது இந்த மாசம்!

மதுரைக்கு வந்த சோதனை

மிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு, 25 லட்சம் ரூபாய் பரிசுபெற்ற பெருமைக்குரிய மதுரை மாநகராட்சி, ஜப்தி செய்யப்பட்டிருக்கிறது. ‘சிறந்த மாநகராட்சி’ என்று முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கி ஒரு மாதம் முடிவதற்குள், மதுரை மாநகராட்சிக்கு இந்த அவலநிலை.

மதுரை, ஒரு வளர்ந்த கிராமம் மாதிரித்தான் இப்போதும் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளால் பல நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டும், மதுரை மாநகருக்குள் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆளும் அ.தி.மு.க-வின் மண்டலத் தலைவரே மாநகராட்சிக்கு எதிராக அதிரடிப் புகார்களை எழுப்பிவருகிறார். ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காகத் தினமும் ஒரு போராட்டம் நடத்திவருகிறார்கள். குப்பைகள் அள்ளப்படாமல் மதுரை மாநகரே நாற்றமெடுக்கிறது. மரகதலிங்கம் காணாமல்போன விவகாரம், அமைச்சர் செல்லூர்ராஜு மற்றும் எம்.எல்.ஏ-வான அண்ணாதுரை ஆகியோருக்கு இறப்புச் சான்றிதழ்களும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்ட விவகாரங்கள் என பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது, மதுரை மாநகராட்சி நிர்வாகம். இந்த லட்சணத்தில்தான், சிறந்த மாநகராட்சி விருதுக்கு இது தேர்ந்தெடுக்கப்பட்டது. விருது தொடர்பான அறிவிப்பைக் கண்டு, மதுரை மாநகர்வாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்படியென்றால், மற்ற மாநகராட்சிகள் எல்லாம் இதைவிட கேவலமாக இருக்குமோ என்று கமென்ட் அடிக்க ஆரம்பித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்