நச்சுக் கழிவுத் திட்டம்... நாசமாகும் மாவட்டம்!

அமைச்சருக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்

திர்க் கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, மக்களுக்கு எதிரான ஒரு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, அமைச்சரான பின் அதே திட்டத்தைக் கொண்டுவர அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முயற்சி செய்கிறார் என்று ஈரோடு பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பிளாட் எண். கே கே 5 முதல் 7 வரையிலான இடத்தில் நச்சுக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைக் கொண்டுவர 2010-ல் தி.மு.க அரசு முயன்றது. அதற்கு விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டத்தை 20.7.2010 அன்று நடத்தினார், மாவட்ட ஆட்சியர் சுடலைக்கண்ணன். சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர், அப்போதைய எம்.எல்.ஏ-வும் தற்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவருமான தோப்பு வெங்கடாசலம். பொதுமக்களின் எதிர்ப்பால், அப்போது இந்தத் திட்டம் வேண்டாம் என அரசுக்குப் பரிந்துரை செய்தார் மாவட்ட ஆட்சியர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்