வாகனக் கட்டணமா? வழிப்பறியா?

டோல்கேட் தில்லுமுல்லுகள்!ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி

நாம் எந்த ஊருக்குப் பயணிப்பதாக இருந்தாலும், டோல்கேட் தாண்டியே செல்லவேண்டிய சூழலில் இருக்கிறோம். காரில் பயணிப்பதாக இருந்தாலும், பேருந்தில் போவதாக இருந்தாலும், நேரடியாக அல்லது மறைமுகமாக டோல்கேட் கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும். உதாரணமாக, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல தனியார் பேருந்துக் கட்டணம் 600 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், அதில் 117 ரூபாய் டோல்கேட் சாலைகளுக்கான கட்டணமாக இருக்கிறது. தனியார் பேருந்துகளில் 30 சதவிகித கட்டண உயர்வு, டோல்கேட் கட்டண சாலைகளினால்தான்.

டோல்கேட் கட்டணம் என்பது, நாம் பயணிக்கும் சாலையின் பயன்பாட்டுக் கட்டணத்துடன், அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகளுக்குமான(!) வரியும் அடங்கும். என்ன கொடுமை என்றால், எந்த வாகனமாக இருந்தாலும் அது வாங்கப்படும்போதே, அதற்கான சாலை வரி கட்டப்பட்டுவிடுகிறது. அத்துடன், நாம் செலவழிக்கும் எரிபொருள் கட்டணத்தில் ஒவ்வொரு லிட்டருக்கும் குறிப்பிட்ட பகுதி சாலை வரிக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் அடிப்படை வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்