“சொந்தப் பிரச்னைகளை எந்த மொழியில் சொல்வது?”

தமிழ் மொழியில் வழக்காட வக்கீல்கள் போராட்டம்!

ஞானாம்பாள் வக்கீல்களுக்கு நியாயபோதஞ் செய்தபிறகு, மறுபடியும் அவர்களைப் பார்த்துச் சொல்கிறாள்: ‘‘இங்கிலீஷ் அரசாட்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற தமிழ்க் கோர்ட்டுகளில் சில தமிழ் நியாயவாதிகள் தமிழில் வாதிக்காமல் இங்கிலீஷில் வாதிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். தேச பாஷையும் தமிழ், கோர்ட்டில் வழங்கா நின்ற பாஷையும் தமிழ். நியாயாதிபதியும் தமிழர்! வாதிக்கின்ற வக்கீலும் தமிழர். மற்ற வக்கீல்கள், கட்சிக்காரார்கள் முதலானவரும் தமிழர்களே. இப்படி எல்லாந் தமிழ் மயமாயிருக்க அந்த வக்கீல்கள் யாவருக்கு பிரீதியாப்தமாக இங்கிலீஷில் வாதிக்கிறார்களோ? அப்படி வாதிக்கிறதினால் அவர்களுக்குத்தான் என்ன சிலாக்கியம்?’’

- தமிழின் முதல் நாவல் என்று போற்றப்படும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்தில் இப்படி ஒரு காட்சி. இந்த நாவல் எழுதப்பட்டு 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நிலைமை அப்படியேத்தான் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்