போடாத சாலை... கட்டாத சுவர்!

பெரியகுளத்தில் ‘அழகு’ வடிகிறது!

“நகர்மன்ற கூட்டத்துக்கு சேர்மன் வரமாட்டார். ஆனால், அவருடைய கையெழுத்தைப் போட்டு தீர்மானங்கள் நிறைவேறும். நகர்மன்ற கூட்டத்தில் யாராவது மக்களின் கோரிக்கைகளை வைத்தாலோ, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கேள்வி கேட்டாலோ அவர்களுக்குச் சிக்கல்தான்.”  - கடந்த 2014-ல் தமிழகத்தின் தலைசிறந்த இரண்டாவது நகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்ட பெரியகுளம் நகராட்சியின் நிலைமைதான் மேலே சொன்னது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நடந்த பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில், ‘‘எங்க வார்டுல எந்த அடிப்படை வசதியும் செஞ்சு தரல. ரோடு வசதி, மழைநீர் வடிகால் போன்ற திட்டங்கள் எல்லாம் செஞ்சிருப்பதா சொல்லிருக்கீங்க. ஆனா அதெல்லாம் நடக்கவே இல்ல” என ஆறாவது வார்டு கவுன்சிலரான தங்கராஜ் நகர்மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரை கடந்த 11-ம் தேதி பெரியகுளம் பேருந்து நிலையத்தில் ஒரு தரப்பினர் தாக்கியதோடு, ‘நகரத்தை எதிர்த்துப் பேசினா தொலைச்சுடுவோம்’ என தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, கிளம்பியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்