“அய்யா வாங்க... பார்த்து வாங்க!”

பி.ஆர்.பி-யிடம் போலீஸார் காட்டிய கரிசனம்

கிரானைட் குவாரியில் நரபலி கொடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு வராமல் தட்டிக்கழித்துவந்த பி.ஆர்.பி. ஒரு வழியாக, கடந்த 17-ம் தேதி அதாவது, விநாயகர் சதுர்த்தி அன்று கீழவளவு காவல் நிலையத்துக்கு வந்தார். அன்றைய தினம், கீழவளவு காவல் நிலையம் தலைகீழாக மாறியிருந்தது. மெயின்ரோடு மறிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. காவல் நிலையம் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவோடு இருந்தது. எல்லாம் பி.ஆர்.பி. விசாரணைக்கு வருகிறார் என்பதால்தான்.

பகல் 12 மணியளவில், தனது வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ பி.ஆர்.பி. வந்தார். அங்கு அவருக்கு போலீஸ் அதிகாரிகள் கொடுத்த வரவேற்பையும், மரியாதையையும், கரிசனத்தையும் கண்டு அங்கிருந்த அனைவரும் திகைத்துப்போனார்கள்.
 
அவருக்காக காத்திருந்த எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார், ‘அய்யா வாங்க... பார்த்து வாங்க... பிரஸ்காரங்க எல்லாம் ஓரமா போங்க...’ என்று பி.ஆர்.பி-யை பவ்யமாக அழைத்துச்சென்றனர். பி.ஆர்.பி-க்காக மின்விசிறிக்குக் கீழே போடப்பட்டிருந்த சொகுசு நாற்காலியில் அவர் அமர்ந்தார். 10 அடிக்கு அப்பால் மேலூர் டி.எஸ்.பி மங்களேஸ்வரன், ஏ.டி.எஸ்.பி மாரியப்பன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அமர்ந்தனர். பி.ஆர்.பி-க்கு நேராக வீடியோ கேமராவை ஆன் செய்துவிட்டு, போலீஸ் வீடியோகிராபர் வெளியேறிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்