பெரியோர்களே... தாய்மார்களே! - 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன், ஓவியம்: டிராட்ஸ்கி மருது

ஊர் உலகத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முதன் முதலில் சட்டக் கல்லூரி மாணவர்கள் களத்தில் குதிப்பது ஏன்? வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? வேறு வேலை இல்லை என்பதாலா? இல்லை. அவர்களது படிப்பு, சமூகத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இன்னும் சொன்னால், சமூகத்தைப் பற்றித்தான் படிக்கிறார்கள். அதனால்தான் அன்றைய தேச விடுதலைப் போராட்டத்தில் மற்ற யாரையும்விட, வழக்கறிஞர்கள் அதிகமாக ஈடுபட்டார்கள். சட்டமறுப்பு போராட்டத்தில் நீதிமன்றப் புறக்கணிப்புக்குக் கூடுதலான முக்கியத்துவம் தரப்பட்டதற்குக் காரணம், வழக்கறிஞர்கள் கையில் எடுத்தால் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இறுதி வரை வேகம் பெறும் என்பதற்காகத்தான்.

எனவே, கண்ட விஷயங்களுக்கு எல்லாம் போராட்டம் எனக் குதிக்காமல் கனமான பிரச்னைகளுக்காக மட்டும் வழக்கறிஞர் சமூகம் போராடுமானால், அவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர்கள் காலம் கடந்தாவது உணர வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்