மௌனம் காக்கும் அரசு!

ரசீது போட்டு நடக்கும் வழிப்பறி...பெரு முதலாளிகளின் டோல்கேட் வேட்டை...

டோல்கேட்டில் நடைபெற்றுவரும் விதிமுறை மீறல்கள் வெறும் போக்குவரத்து சம்பந்தமானது மட்டுமல்ல; அது, சட்டத்துக்கே சவால்விடும் ஒரு முறைகேடு.

டோல்கேட் முறைகேடுகளுக்கு எதிராக, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் சார்பில் வழக்கை நடத்திவரும் வழக்கறிஞர் சுந்தரவதனத்திடம் பேசினோம். “தமிழகத்தில் உள்ள எல்லா டோல்கேட்களிலும் பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்து வருகின்றன. உதாரணமாக, லாரிகளில் அதிகபட்சமாக எவ்வளவு பாரம் ஏற்றலாம் என்பதற்கு வரையறை உண்டு. ஆனால், அந்த விதிகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. பெரும்பாலான லாரிகளில் அதிக அளவிலேயே பாரம் ஏற்றப்படுகிறது. இதனால், வாகனங்களைச் செலுத்த முடியாமல் ஓட்டுநர்கள் திணறுகின்றனர். வாகனங்கள் பழுதடைகின்றன. பல்வேறு விபத்துகளுக்கும் அது இட்டுச்செல்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்