“மக்களை நம்பாமல் மதுவை நம்பும் கட்சிகள்!”

நாஞ்சில் சம்பத் பேச்சு

‘மக்களை நம்பாமல் மதுவை நம்பும் கூட்டம்’ என எதிர்க் கட்சிகளை விளாசித்தள்ளினார் அ.தி.மு.க கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். சென்னை ஆயிரம்விளக்கில் நடந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்தின் பேச்சில் அனல் பறந்தது.

‘‘தமிழக அரசு மீது விமர்சனங்களை வைப்பதற்கு எதிரிகளுக்கு எந்த ஆயுதமும் கிடைக்கவில்லை. அதனால், போராட்டத்தைத் தேடி அலைகிறார்கள். அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆணி என்றால் அடிப்பார்கள்; ஏணி என்றால் ஏறுவார்கள். ஆட்சி என்றால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் என்பது தெரியாதது அல்ல. சட்டமன்றத்துக்கு வந்து பேச வேண்டிய ஸ்டாலின், நமக்கு நாமே துணை என்று நடைபயணம் புறப்பட்டுவிட்டாராம். நடைபயணம் போனவர்கள் கதி என்ன ஆயிற்று? டீக்கடை, குடிசை வீட்டில் தங்கியவர்கள் எல்லாம் இருந்ததையும் இழந்தது தெரியாதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்