யூகங்களுக்கு என்னிடம் பதில் இல்லை!

கழுவும் மீனில் நழுவும் ஜி.கே.வாசன்

ரசியல் களம் அதகளமாகியுள்ள நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். கடந்த 26-ம் தேதியன்று வாசனின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். நாம் கேட்ட பல கேள்விகளுக்கும் பிடிகொடுக்காமல் மிகச் சாதுர்யமாக நழுவினார். 

“சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை எப்போது அறிவிக்க உள்ளீர்கள்?”

“எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை இந்த மாத இறுதியில் அறிவிக்க உள்ளேன். நாங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறோமோ, அந்தக் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.”

“தேர்தலில் த.மா.கா முன்வைக்கும் முழக்கங்கள் என்ன?” 

“மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படுவோம். கல்வி, சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் எங்களுடைய முழக்கங்கள் அமையும்.”

“நீங்கள் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கப்போவதாகக் கூறப்படுகிறதே?”

“கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக முடிவு செய்யும்போது, உறுதியான அறிவிப்பு வெளியாகும். யூகங்களுக்கு நான் இடம் கொடுக்க விரும்பவில்லை. தேர்தல் வரும்போது பல கட்சிகள் தங்களது கொள்கைக்கு இணக்கமான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்புதான். பேச்சுவார்த்தையின் இறுதியில்தான் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது தெரியவரும். யூகங்களின் அடிப்படையில் வரும் தகவலை நான் விரும்பவில்லை. கூட்டணி அமைப்பதில் என்ன முறைகளை மற்ற கட்சிகள் பின்பற்றினவோ, அதே வழிமுறைகளைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம்.”

“இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும்படி அ.தி.மு.க கூறியதாகவும், நீங்கள் தயங்குவதாகவும் கூறப்படுகிறதே?”

“கூட்டணியை முடிவு செய்யும்முன்பு, இது போன்ற எந்த யூகங்களுக்கும் என்னிடம் பதில் இல்லை.”

“த.மா.கா-வின் சைக்கிள் சின்னம் உங்களுக்கு மீண்டும் கிடைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?”

“தேர்தல் ஆணையத்தில் இருந்து கடிதம் பெற்றபிறகு அது குறித்து அறிவிப்போம். எங்களுக்குச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்