“வாக்களியுங்கள்... வாக்களிக்க வலியுறுத்துங்கள்!”

நம் விரல்... நம் குரல்! - கருத்தரங்கம்

ந்திய தேர்தல் ஆணையம், விகடன் குழுமம், தி சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் இணைந்து நடத்தும் ‘நம் விரல்... நம் குரல்’ என்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2016 விழிப்பு உணர்வுக் கருத்தரங்கம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் செந்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி, துணை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆர்.டி.ஓ. ராஜசேகரன் ஆகியோர் பேசினர். திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நடந்த விழிப்பு உணர்வுக் கருத்தரங்கில் கல்லூரித் தலைவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஞானமூர்த்தி, துணை ஆட்சியர் குணசேகரன் ஆகியோர் பேசினர்.

இரண்டு கல்லூரிகளிலும் நடைபெற்ற கருத்தரங்கில் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். கல்லூரியில் மாணவர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த பேச்சு, அபிநயக் கூத்து மற்றும் குறும்படம் ஆகியவை அரங்கேறின. கருத்தரங்கில் தேர்தல் விழிப்பு உணர்வு குறித்து மாணவ - மாணவிகள் பேசினர்.

விழுப்புரம்

கருத்தரங்கில் பேசிய விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியர் ஜெயசீலன், ஓர் உண்மை நிகழ்வுடன் ஓட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். ‘‘ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் முதல்வர் வேட்பாளராக நின்றபோது 62,215 ஓட்டுகள் பெற்றுத் தோல்வி அடைந்தார். ஆனால், வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகள் 62,216. இதில் தோல்வி அடைந்தவரின் வீட்டில் அவரது மனைவி, அவரது அம்மா மற்றும் அவரது கார் டிரைவர் ஆகிய மூவரும் தனது வாக்கினைப் பதிவு செய்யவில்லையாம். அவர்கள் ஓட்டு போட்டிருந்தால், இவர் ஜெயித்திருக்கலாம். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். எனவே, ஓட்டு போடுவதின் முக்கியத்துவத்தை உங்கள் குடும்பத்திலும், அக்கம் பக்கம் இருப்பவர்களிடமும் சோஷியல் மீடியாக்களிலும் பகிர்ந்து 100 சதவிகித வாக்கைப் பதிவுசெய்யத் துணைபுரியுங்கள்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்