அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

முட்டிமோதும் பிரமுகர்கள்...

மிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வுக்குள் முட்டிமோதி வருகிறார்கள் அந்தக் கட்சியின் பிரபலங்கள். யார் யார் சீட் கேட்கிறார்கள். யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்பதைப் பற்றி வெளியிட்டு வருகிறோம். இந்த இதழில்...

சென்னை மாவட்டம்

மயிலாப்பூர்: மைத்ரேயனின் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்காலம் முடியப்போகிறது. அடுத்து அவருக்கு எம்.எல்.ஏ-வாக ஆக ஆசை. மயிலாப்பூரைக் குறிவைத்துள்ளார். முன்னாள் டி.ஜி.பி-யான நட்ராஜ் சீட் எதிர்பார்ப்பில் உள்ளார். பாடகி அனிதா குப்புசாமி, வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், பாசறைச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள்.

வேளச்சேரி: சிட்டிங் எம்.எல்.ஏ-வான அசோக், ஓ.பி.எஸ் ஆதரவாளர் என்பதால், அவருக்கு நோ சான்ஸ் என்கிறார்கள். பகுதிச் செயலாளர் சரவணன், மண்டலக்குழுத் தலைவர் திருவான்மியூர் முருகன், பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, பரசுராமன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள்.

சோழிங்கநல்லூர்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான கந்தன் தனக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார். கவுன்சிலர் நீலாங்கரை முனியசாமி, மாவட்ட நிர்வாகி பெரும்பாக்கம் ராஜேந்திரன், லியோசுந்தரம் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள்.

தி.நகர்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான கலைராஜனுக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்கிறார்கள். மாவட்டச் செயலாளர் சத்யா இவருக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார். தென் சென்னை இளைஞர் பாசறை முன்னாள் தலைவர் இரா.பரணீஸ்வரனின் பெயரும் அடிபடுகிறது. கடந்த ஆட்சியில் அழகிரி மகன் துரை தயாநிதியோடு மோதியவர் இவர்.

விருகம்பாக்கம்: அமைப்புசாரா அணியின் மாநிலச் செயலாளர் கமலகண்ணன், நடிகர் செந்தில், மாவட்டச் செயலாளர் விருகை ரவி, பாஷா என்கிற நடிகர் விஜய்கார்த்திக் ஆகியோர் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

ஆயிரம் விளக்கு: அமைச்சர் வளர்மதியின் தொகுதி. தனக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என்று சொல்லி வருகிறார். பேச்சாளர் ஃபாத்திமா பாபு, பகுதிச் செயலாளர் நுங்கை மாறன், முகில் ஆகியோர் வளர்மதிக்குப் போட்டியாகக் களம் இறங்கி இருக்கிறார்கள்.

அண்ணா நகர்: அமைச்சர் கோகுல இந்திராவின் தொகுதி. மீண்டும் தனக்கே வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறார் கோகுல இந்திரா. முன்னாள் ஜெ பேரவை செயலாளர் வ.சுகுமார்பாபு 1989ல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோற்றவர். கவுன்சிலராக இருக்கும் சுகுமாறனின் பெயரும் அடிபடுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்