“நாங்கள் பேசிய பேரம் என்ன?”

பொளந்து கட்டிய பிரேமலதா!

க்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து ‘கேப்டன் விஜயகாந்த் அணி’யை அமைத்துள்ள தே.மு.தி.க., மார்ச் 25-ம் தேதி பிரசாரக் கூட்டத்தை நெல்லையில் தொடங்கியது. பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ‘‘தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவே தே.மு.தி.க-வின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தது. ‘கேப்டன் குழப்பத்தில் இருக்கிறார். அவருக்கு முடிவெடுக்கத் தெரியாது’ என்றெல்லாம் மீடியாக்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அவர் தெளிவாக முடிவெடுத்திருக்கிறார். 1967-ல் அண்ணா தலைமையில் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்பட்டதுபோல, இந்தத் தேர்தலிலும் திருப்புமுனை ஏற்படப்போவது நிச்சயம். ஊழல் கறைபடியாத நல்ல தலைவர்களைக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியினர் நம்மோடு சேர்ந்து இருக்கிறார்கள். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக கேப்டன் இந்தக் கூட்டணியை அமைத்து இருக்கிறார்.

‘தே.மு.தி.க-வுடன் பேரம் படியவில்லை, சீட் படியவில்லை’ என்று எழுதினார்கள். பேரம் படியவில்லை என்பது உண்மைதான். என்ன பேரம் என்று கேட்டால்தான் உண்மை விளங்கும். ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும், மணல், கனிமவளக் கொள்ளை இல்லாதவர்களுடன் கூட்டணி என்றுதான் கண்டிஷன் போட்டோம். இதைத்தான் பேரம் என்கிறார்கள். இரு கட்சிகளும் வரவில்லை. இப்போது நாங்கள் என்ன பேரம் பேசினோம் என்பது புரிகிறதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்