நீதிமன்றத்தை அவமதித்த மாஜிஸ்திரேட்!

கிரானைட் மோசடி வழக்கில் திடீர் திருப்பம்

‘‘தமிழகத்தையே மிரளவைத்த கிரானைட் வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டுவருகிறார் மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனப் பரிந்துரை செய்துள்ளார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ். பல்லாயிரம் கோடி மோசடி நடந்ததாகக் கூறப்படும் கிரானைட் குவாரி வழக்கில், குவாரி அதிபர்களுக்கு ஆதரவாக நீதித்துறையினரே செயல்பட்டு உள்ளது இதன் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பி.ஆர்.பி உட்பட பல நிறுவனங்கள் அரசை ஏமாற்றி அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு சட்ட விரோதமாக கிரானைட் வெட்டியெடுத்ததும், இதனால் பல மலைகள் காணாமல் போனதும், பாசனக் கால்வாய்கள் மற்றும் கிராமங்கள் அழிக்கப்பட்டதும், இந்தக் கொடுமைகள் மதுரை கலெக்டராக சகாயம் பொறுப்பேற்றபின் வெளி உலகத்துக்கு தெரிய வந்ததும் பழைய கதை. மாஜிஸ்திரேட் துணைபோனது புதுக்கதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்