தேர்தல் கமிஷன்... கொஞ்சம் கவனிங்க!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே  அரசு ஊழியர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார்கள். ஆனால், ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து பல அதிகாரிகள் இன்னும் மீளவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் அரங்கேறும் ‘விசுவாசம்’ இந்தத் தேர்தலிலும் எதிரொலிக்கிறது. கரைவேட்டி கட்டாமல் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறவர்கள் யார் யார்? அவர்களைப் பற்றிய அலசல் இது.

கணேஷ் (புதுக்கோட்டை கலெக்டர்): சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயிலில் யாகம் நடத்தினார்கள் அ.தி.மு.க-வினர். இதில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் கணேஷ் கலந்துகொண்டு வேண்டுதல் நடத்தியது பரபரப்பைக் கிளப்பியது. இந்த கணேஷ்தான் இப்போது புதுக்கோட்டை மாவட்டத் தேர்தல் அதிகாரி. கடந்த வாரம் விராலிமலை சித்திரம்பட்டி பகுதியில் விஜயபாஸ்கர் பெயரோடு குத்துவிளக்கு வழங்கிய மாமுண்டி, சண்முகம் உள்ளிட்டவர்களை பறக்கும் படை பிடித்தது. இதில் கணேசனின் தலையீடு இருந்ததால், இரண்டு நாட்கள் கழித்தே வழக்குப் பதிவானதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்