கழுகார் பதில்கள்!

கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

 அ.தி.மு.க முக்கியப் பிரமுகர்களிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பரவிக்கிடக்கின்றனவே?


 சில வாரங்களாகப் பல்வேறு ஊடகங்களில் இந்தத் தகவல்கள் வந்தன. இதுபற்றி அந்தக் கட்சித் தலைமையும் மறுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களும் விளக்கம் தரவில்லை. மெளனம் சம்மதமா?

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

 கட்சி, ஆட்சி இரண்டிலும் ஜெயலலிதாவுக்கு இணையாக சசிகலா வந்தால், அ.தி.மு.க-விலும் வாரிசு அரசியல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா?


 கட்சி, ஆட்சி இரண்டிலும் ஜெயலலி தாவுக்கு இணையாக சசிகலா எப்போது வருவார் என்பது தெரியவில்லை. அதனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், சசிகலா அந்த இடத்துக்கு வந்தால் அவருக்குப் பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வாரிசாக வருவார். அப்படி யாரைக் கொண்டுவருவது என்பதில்தான் மன்னார்குடி குடும்பங்களுக்கு மத்தியில் மனக்கசப்பு ஏற்பட்டு வருகிறது.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

 தமிழகத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி., த.மா.கா ஆகிய மூன்று கட்சிகளில் வாக்கு வங்கி எதற்கு அதிகம்?


 மூன்று கட்சிகளும் தனித்தனியாக நின்றால்தான் அதனைச் சரியாகக் கணிக்க முடியும். தனித்துப் போட்டியிட மூன்று கட்சிகளும் தயாராக இல்லை. தி.மு.க கூட்டணியில் இணைந்துவிட்டது காங்கிரஸ். அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது த.மா.கா. ஜெயலலிதாவுக்காகவும் விஜயகாந்த்துக்காகவும் காத்திருந்து கசப்படைந்து உதிரிக் கட்சிகளை ஒன்று சேர்க்க பி.ஜே.பி முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இவர்களது சொந்த செல்வாக்கைக் கணிப்பது சிரமம். ஒருவேளை, சொந்த செல்வாக்கு என்ன என்று தெரியக் கூடாது என்பதற்காகத்தான் கூட்டணிக்கு அலைகிறார்களோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்