மிஸ்டர் கழுகு: நம்பர் தகராறு - கதறும் காங்கிரஸ் - தவிக்கும் த.மா.கா.

‘‘கதர் சட்டைகள் இரண்டும் கலங்கு கின்றன” என்றபடி உள்ளே வந்தார் கழுகார். அவருக்கு வழிவிட்டு அமைதி காத்தோம்.

‘‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்துவிட்டது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா சேரத் துடிக்கிறது. இரண்டு கட்சிகளையும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வறுத்து எடுக்கின்றன” என்றார்.

‘‘குலாம்நபி ஆசாத்துக்கும் கருணாநிதிக்கும் நடந்த பேச்சுவார்த்தையை எமது நிருபர் எழுதி இருக்கிறார்.”

‘‘அதன் இறுதிக்கட்ட சாராம்சங்களை மட்டும் நான் சொல்கிறேன். பழைய முறைப்படி 63 தொகுதிகளைக் கேட்டு ஆரம்பித்தது காங்கிரஸ். ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒன்று என்ற விகிதத்தில் 30 தொகுதிகளை வாங்க காங்கிரஸ் திட்டம் போடுகிறது. கருணாநிதியின் கணக்கு காங்கிரஸ் கட்சிக்கும் த.மா.கா-வுக்கும் சேர்த்து 70 தொகுதிகளாம்.”

‘‘இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இருக்க முடியுமா?”

‘‘அதில்தான் இரண்டு பேருக்கும் குழப்பமே. ஜி.கே.வாசன் இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்திக்கு இதில் விருப்பம் இல்லை என்கிறார்கள்.

த.மா.கா-விலும் ஒரு தரப்பு, ஓ.கே என்கிறது. இன்னொரு தரப்பு, வேண்டாம் என்கிறது.”

‘‘ஓஹோ!”

‘‘காங்கிரஸைப் பொறுத்த வரை கருணாநிதியிடம் முழுமையாகக் கறந்துவிட நினைக்கிறது. ஆனால், தி.மு.க 25-தொகுதிகளுக்கு மேல் ஏறி வராமல் அப்படியே இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்குக் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.”

‘‘த.மா.கா-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் நடந்த பேச்சுவார்த்தை என்ன ஆச்சு?”

‘‘அதாவது, 32 தொகுதிகளைக் கேட்டிருக்கிறார் ஜி.கே.வாசன். ஆனால், 7 தொகுதிகள்தான் தரமுடியும் என்றதாம் போயஸ் கார்டன். 23 தொகுதிகளுக்குக் குறையாமல் வேண்டும் என்று இறுதியாகச் சொல்லிவிட்டாராம் வாசன். 10 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பு இல்லை என்று தோட்டத்தில் இருந்து சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.”

‘‘அப்படியானால், 200-க்கு மேல் அ.தி.மு.க போட்டியிடப் போகிறதா?”

‘‘இருக்கலாம்.”

‘‘அ.தி.மு.க நேர்காணலில் என்ன நடக்கிறதாம்?”

‘‘21-ம் தேதி தொடங்கிய நேர்காணலில் முதல் நாள் மட்டும்தான் அனைவரையும் சந்தித்தாராம் ஜெயலலிதா. 22-ம் தேதி அழைக்கப்பட்டு இருந்தவர்களை மறுதினம் வாருங்கள் என்று நேரம் கொடுத்துள்ளார். ஆனால், நான்கு நாட்கள் தொடர்ந்துவந்த பின்னர்தான் ஜெயலலிதாவின் சந்திப்பே நடந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்