“இருவர் பேசினால் பேரம்... ஒருவர் தனியாகப் பேசினால் பைத்தியம்!”

வைகோ சொன்ன பேர விவகாரம்

விஜயகாந்த்தோடு தி.மு.க., பி.ஜே.பி கட்சிகள் கூட்டணிக்காகப் பேரம் பேசின என வைகோ கொளுத்திப்போட, கொந்தளித்துக் கிடக்கின்றன எதிர் தரப்புகள். அந்த எதிர் தரப்பினர் என்ன சொல்கிறார்கள்?

ஹெச்.ராஜா (பி.ஜே.பி.): ‘‘பி.ஜே.பி-யும், தி.மு.க-வும் விஜயகாந்த்தோடு பேரம் பேசி இருக்கிறார்கள் என்று ஆதாரமில்லாமல் வைகோ பேசி இருக்கிறார். இப்படி அவதூறு பரப்புவது அவருக்கு இப்போது எல்லாம் பழகிப் போய்விட்டது. இவர் இப்படி பேசியதும் தே.மு.தி.க மகளிர் அணித் தலைவி பிரேமலதா, அவர் சொன்னதை மறுத்து இருக்கிறார். இப்படி தரக்குறைவாக அவர் பேசியதற்கு வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், தே.மு.தி.க-வை கொச்சைப்படுத்தியதற்காக விஜயகாந்த், வைகோவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட வேண்டும். தேவை இல்லாமல் இந்தப் பேர விவகாரத்தை வைகோ, பேசினார். அந்தத் தொலைக்காட்சி பேட்டியில் வைகோ வடிவேலுவைப்போல நகைச்சுவை செய்திருக்கிறார். விவாதத்தில் அவரை நோக்கிக் கேள்வி கேட்டபோது அப்படி அவர் எழுந்துசெல்வது மக்களையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயல். அதற்கு அவர் பதில் சொல்லி இருக்கவேண்டும். 70 வயதைத் தொடுகிற, 3 முறை ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்த, ஒரு கட்சியை 20 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிற ஓர் அரசியல் தலைவர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதையே இது காட்டுகிறது. தி.மு.க-வை விட்டு வெளியேறியபோது 8 மாவட்டச் செயலாளர்களோடு போனவர், தன்னுடைய எடுத்தேன், கவிழ்த்தேன்  இயல்பால் இன்று அந்தக் கட்சியை அழித்தேவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்