அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

முட்டிமோதும் பிரமுகர்கள்...

மிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சீட் கேட்டு அ.தி.மு.க-வுக்குள் பலர் முட்டி மோதுகிறார்கள். அதுபற்றிய விவரங்களைக் கடந்த சில வாரங்களாக வெளியிட்டு வருகிறோம். இந்த இதழில்...

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்:
மாவட்ட அவைத்தலைவர் திண்டுக்கல் சீனிவாசன், மாநகராட்சி மேயர் மருதராஜ், நகரச் செயலாளர் பாரதி முருகன் ஆகியோர் நேர்காணல் முடித்துள்ளனர். திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

நத்தம்: அமைச்சர் நத்தம் விசுவநாதனின் தொகுதி. இவருக்கு சீட் கிடைக்குமா, கிடைக்காதா? என்ற சந்தேகம் கட்சியினரிடையே உள்ளது. இந்த நிலையில் நத்தம் ஒன்றியச் செயலாளர் ஷாஜகான், சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர் ராமராசு ஆகியோர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
வேடசந்தூர்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான பழனிச்சாமியும், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் டாக்டர் பரமசிவமும் ரேஸில் இருக்கிறார்கள். இளைஞர், படித்தவர் என்பதால் பரமசிவத்துக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். 

ஆத்தூர்: ஒன்றியச் செயலாளர் பி.கே.டி.நடராஜன், ஆத்தூர் ஒன்றிய அவைத்தலைவரும், சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவருமான முருகன், ரெட்டியார் சத்திரம் ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் நேர்காணலுக்குச் சென்று வந்துள்ளனர். ஆனாலும், ஜெயலலிதாவின் உத்தரவுபடி நத்தம் விசுவநாதன் இங்கே வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிறார்கள்.

ஒட்டன்சத்திரம்: நகர்மன்றத் தலைவர் பழனியம்மாளின் கணவர் பாலசுப்பிரமணியம், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கிட்டுச்சாமி ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பழநி: சிட்டிங் எம்.எல்.ஏ-வான வேணுகோபாலு, முன்னாள் எம்.பி-யான குமாரசாமி, பழனி ஒன்றியச் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் நேர்காணலுக்குச் சென்று வந்துள்ளனர். குமாரசாமிக்கு சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

நிலக்கோட்டை (தனி): முன்னாள் எம்.எல்.ஏ-வான தேன்மொழி, அவரது கணவர் சேகர் ஆகியோர் களத்தில் உள்ளனர். தேன்மொழிக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்