கூட்டணி முயல்கள்... குழப்பத்தில் ரங்கசாமி!

புதுச்சேரி அதகளம்

.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி, பி.ஜே.பி என ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரான முதல்வர் ரங்கசாமி துடிப்புடன் உள்ளார். ஆனால், அவரைச் சேர்த்துக்கொள்ள எல்லாக் கட்சிகளும் யோசித்து வருகின்றன.

2011-ம் ஆண்டில் கட்சி ஆரம்பித்த மூன்றே மாதங்களில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தவர் ரங்கசாமி. அதே வேகத்திலேயே அ.தி.மு.க-வை கழட்டியும்விட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தவர், ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸையும் தெறிக்கவிட்டு
அ.தி.மு.க-வுடன் மீண்டும் கைகோத்தார். தற்போது, மீண்டும் முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற கனவில் இருக்கும் ரங்கசாமிக்கு, பல முனைகளில் இருந்தும் தாக்குதல்கள் தொடங்கி இருக்கின்றன.

காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளில் அதிருப்தியில் இருந்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கியது அ.தி.மு.க. இதன் மூலம் தனியாகவே களம் இறங்கலாம் என்பதும் அந்தக் கட்சியின் எண்ணம். இதனால், அதிர்ச்சியடைந்த என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு, கூட்டணி பற்றி உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியது. இந்தத் தகவல் கார்டன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. “சென்ற முறைபோல ரங்கசாமியிடம் ஏமாறத் தயாராக இல்லை.

15 தொகுதிகள், தலா இரண்டரை வருட ஆட்சி, அமைச்சரவையில் சம பங்கு ஆகிய நிபந்தனைகளை ஏற்க வேண்டும். அதன் பின்னர்தான் கூட்டணி பற்றி பேச்சு” என்று சொல்லிவிட்டார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்