தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.?

ஆட்சேபணை இல்லை என்கிறார் திருநாவுக்கரசர்!

முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர், ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பார்வையாளர். இந்தப் பதவிகளுடன் தமிழகத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான சு.திருநாவுக்கரசரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“தி.மு.க கூட்டணியைவிட்டு காங்கிரஸ் வெளியேறப் போவதாகச் செய்திகள் கசிகின்றனவே?”

“அதெல்லாம் இல்லை. சீட் எண்ணிக்கை விஷயத்தில் தி.மு.க தரப்பில் ஒரு நம்பரை சொல்றாங்க. நாங்க ஒரு நம்பரைச் சொல்றோம். அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளில் ஒரு முடிவுக்கு வருவோம். இது செட்டில் ஆவதுதான் இரண்டு பேருக்கும் நல்லது. ஏன்னா.. சீட் பங்கீடு என்பது இந்தச் சட்டமன்றத் தேர்தலோட முடிஞ்சுப்போறதில்லை. உள்ளாட்சித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்தடுத்து வருகின்றன. மதவாதத்தை ஒழிக்க வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும். இதுமாதிரியான எதிர்கால அரசியல் மாற்றங்களையும் மனசுல வெச்சுப் பார்க்கிறப்ப தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வருவதுதான் நல்லது.

“ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க கோரிக்கை வைக்கப்போகிறார்களாமே?”

“தேர்தல் அறிக்கை வெளியானால்தான் தெரியும். என்ன கருத்து வந்தாலும் அது தி.மு.க-வோட கருத்து.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்